Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha
நல்லூரில் மரக்கிளை முறிந்தது; ஒருவர் காயம்

யாழ். நல்லூரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் புலோலி மேற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜங்கரன் (வயது 39) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து பூக்களைச் சொரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், ஹெலிகொப்டர் விசிறியின் காற்று வேகத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வீதியிலிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து இவர் மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த இவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா


