Headlines
Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha

பாடசாலைகளில் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய மொழிகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

பாடசாலைகளுக்குள் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்துவதே இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதன் நோக்கமென ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழி பயன்பாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பாடசாலைகளில் இந்த சங்கங்கள் முன்னெடுக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வித் துறைசார் பல்வேறு பிரிவினருடனும் கலந்துரையாடி, இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மொழிகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

About the Author

Posted by NIsha on 6:10 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:10 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "பாடசாலைகளில் மும்மொழி சங்கங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive