Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! - தடுத்துவைக்கப்பட்ட அகதி விடுதலை!



தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பினைப் பேணினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் எஸ்ஐஓ வினால் கடந்த  நான்கு ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்ட இலங்கை தமிழ் அகதியை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விடுதலைச் செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர் எனவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அவுஸ்திரேலியா பாதுகாப்பு நிறுவனத்தின தன்னிச்சையான முடிவு இரத்துச் செய்யப்பட்டதை அடுத்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த முடிவானது பிரதமர் கேவின் ரட்டின் அரசாங்கத்தின் கொள்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இதன் விளைவாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 50 அகதிகள் விடுதலை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு மேல் முறையீடு செய்யும் உரிமை இருக்கவில்லை என்பதுடன் அவர்களுக்கு எதிரான எந்த ரகசியமான ஆதாரங்களும் இருக்கவில்லை.

இந்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் புரோட்மிடோவ்ஸ் தடுத்து முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதான ஒருவர் நேற்று முன்தினம் மாலை விடுதலை அங்கிருந்து வெளியேறினார்.

இவர் 2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு போரின் பின்னர் தப்பித்து படகு மூலமாக அவுஸ்திரேலியாவை சென்றடைந்தார். அவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதும் அவர் அச்சத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது.

எனினும் இவரினால் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரது புகலிட கோரிக்கை நிராகரித்தது. புகலிட விசா அனுமதியை வழங்குவதில்லை என தீர்மானித்த அரசாங்கம் அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில்லை எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் மீது சுமத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு நிறுவனம் தனது குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலியாவின் ஏ.எஸ்.ஐ.ஓ தனது குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக்கொண்டமை இது நான்காவது முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் தமிழ் அகதியான ரஞ்சனி என்பவர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தல் என குற்றம் சுமத்தப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் ஊடாக அவரது மூன்று பிள்ளைகளுடன் சிட்னியில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவில்லை. இதனையடுத்து அந்த பெண் உட்பட பிள்ளை தடுத்து வைக்கப்பட்டமை குறித்து சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தில் பாதுகாப்பு நிறுவத்தின் குற்றச்சாட்டை சவாலுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

About the Author

Posted by NIsha on 1:31 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 1:31 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! - தடுத்துவைக்கப்பட்ட அகதி விடுதலை!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive