Headlines
Published On:Sunday, September 1, 2013
Posted by NIsha

சிரியாவில் இரசாயன தாக்குதலா? முற்றிலும் பொய் என்கிறார் ரஷ்ய ஜனாதிபதி

சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்களை கொன்று குவித்தது. இதை ஐ.நா ஆய்வாளர்கள் உறுதியாக கூறியதை அடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட் சபையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ஒபாமா காத்துகிடக்கிறார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகையில், சிரியா இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது, அதை பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளது என்பதற்கு அமெரிக்கா ஆதாரங்கள் வைத்திருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமும் ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும். என்னை பொருத்தவரை, சிரியா பிரச்சினையில் மற்ற நாடுகளை இழுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வேறொன்றுமில்லை. இதன்மூலம் உலகில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவை பெறுவது யார் என்பதே. சிரியா மீது ஒபாமா, தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். சிரியாவிடம் இராசயன ஆயுதங்கள் இருப்பது என்பது முற்றிலும் பொய் என்றும், அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்சினை குறித்து விவாதிப்பதே நல்லது என்றுட“ தெரிவித்துள்ளார்.

About the Author

Posted by NIsha on 2:06 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 2:06 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "சிரியாவில் இரசாயன தாக்குதலா? முற்றிலும் பொய் என்கிறார் ரஷ்ய ஜனாதிபதி"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive