Headlines
Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha

அனிருத் பாடும் ‘ஓ பெண்ணே’ இசை வீடியோ லண்டனில் படப்பிடிப்பு

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் முதல் படம் ‘வணக்கம் சென்னை’. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை இளம் இசையமைப்பாளர் அனிருத் ஏற்றுள்ளார்.

ஏற்கனவே இவர் இசையமைத்த ’3′ படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இவருக்கு உலகப்புகழை அளித்தது. இரண்டாவது படமான நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சலும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த வரிசையில் ‘வணக்கம் சென்னை’ படப்பாடல்களின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் ‘ஓ பெண்ணே’ பாடலின் இசை வீடியோ படப்பிடிப்பிற்காக அனிருத்தும், அவரது குழுவினரும் இந்த வாரத்தில் லண்டன் செல்ல இருக்கின்றார்கள்.

மனதை மயக்கும் இந்த இனிய பாடல் கவிஞர் நா. முத்துக்குமாரால் எழுதப்பட்டு அனிருத் மற்றும் விஷால் டட்லானியால் பாடப்பட்டுள்ளது. இளவயதினரிடம் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளிவரவிருக்கும் இந்தத் திரைப்படம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என்றும் திரையுலகம் தெரிவிக்கின்ற

About the Author

Posted by NIsha on 12:48 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 12:48 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "அனிருத் பாடும் ‘ஓ பெண்ணே’ இசை வீடியோ லண்டனில் படப்பிடிப்பு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive