Published On:Sunday, September 1, 2013
Posted by NIsha
இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் பூனை
அடர்த்தியான முடியுடன் காணப்படும் பூனை ஒன்று இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஆனி மேரி(வயது 52), கனோல் மியாவ் என்ற பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனையின் உடலில் மிக அடர்த்தியுடன் 22.87 செ.மீ நீளமுள்ள முடி உள்ளது. இதனை பராமரிக்க 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு பூனைக்கு ஷாம்பு குளியல், டிரையர், முடி பராமரிப்பு, பியூட்டிஷியன் மேற்பார்வை போன்ற கவனிப்புகளும் நடந்து வருகிறது. தற்போது இந்த பூனை தான் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது, இதற்கான பிரத்யேக இணையத்தளங்களும் தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதற்கு தினமும் 2 ஆயிரம் பேர் வரை லைக் கொடுத்து வருகின்றனர். உலகளவில் பூனையில் புகழ் பரவி உள்ளதால், கின்னஸ் ரெக்கார்டில் பதிவு செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாராம் ஆனி மேரி. கருப்பு - வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பிரவுன் புள்ளிகளோடு உள்ள இந்த பூனையை வெளியில் அழைத்து சென்றால் நடிகர், நடிகைகளுக்கு இல்லாத அளவுக்கு வரவேற்பாம்.



