Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha
சாய்ந்தமருதில் 7000 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டன
கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருதில் 7000 வெளிநாட்டு சிகரட்டுக்களைத் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததன் பேரில் தாங்கள் சாய்ந்தமருது, தபாலதிபர் வீதியிலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய போதே 7000 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட இந்த 7000 சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபாய் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்கள் டுபாய் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டிருப்பது விசாரணை மூலம் தெரியவந்திருக்கின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.



