Headlines
Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha

கள்ளக் காதலியுடன் ஓட்டலில் ரூம் போட்ட 56 வயது நபர் ஒரு மணி நேரத்தில் மரணம்!


பெண் ஒருவருடன் முதியவர் ஒருவர் ஹோட்டல் அறையொன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்த போது அவ்வறையிலேயே உயிரிழந்த சம்பவமொன்று மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

29 வயதான தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் 56 வயதான நபர் ஒருவர் 1,000 ரூபா செலுத்தி அறையொன்றினை வாடகைக்கு நேற்று காலை எடுத்துள்ளார்.

எனினும், அறையை வாடகைக்கு எடுத்து ஒரு மணிநேரத்திலேயே 56 வயதான குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என மஹரகம பொலிஸார் சந்தேகின்றனர். கீழ் உள்ளாடையுடன் நிலத்தில் வீழ்ந்திருந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் உறுதிசெய்தாக ஹோட்டல் உரிமையாளரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தெஹிவளை நகரசபையில் சேவையாற்றிவந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் உயிரிழந்த ஹோட்டல் அறையிலிருந்து மதுபானப் போத்தல், பொதிசெய்யப்பட்ட பணிஸ் மற்றும் 98,000 ரூபா வைப்பிலிட்ட நிலையில் வங்கிக் கணக்குப் புத்தகம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா கலந்த பீடியை குறித்த நபர் இறப்பதற்கு முன்னர் புகைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த 56 வயதான நபருக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் கள்ளத் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அதன் பொருட்டே அவர்கள் இருவரும் குறித்த ஹோட்டல் அறையில் தங்கியிருக்க வேண்டுமெனவும் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.

About the Author

Posted by NIsha on 3:43 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:43 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கள்ளக் காதலியுடன் ஓட்டலில் ரூம் போட்ட 56 வயது நபர் ஒரு மணி நேரத்தில் மரணம்!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive