Headlines
Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha

23 வயது பெண், 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்

23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண், சிறுவனை தனது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சிறுவனின் பாட்டி, அம்பலாந்தொட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் இரவு நேரத்தில் கடமைக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் துணைக்காக குறித்த சிறுவன் நீண்ட காலமாக அவரது வீட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது

About the Author

Posted by NIsha on 12:46 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 12:46 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "23 வயது பெண், 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive