அமிதாப் பச்சான், அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டடோர் நடிக்கும் இந்திப் படம் சத்யகிரகா. இப்டத்தை பிராகாஷ் ஜா இயக்குகிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அஜய் தேவ்கானும், கரீனாவும் நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தது. இந்த காட்சியில் முத்தமிட்டால் காடசி தத்ரூபமாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். ஆனால், முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என கரீனா கண்டிசனாக கூறிவிட்டாராம். கணவராக இருந்தாலும் சினிமாவில் இனி யாருடனும் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என முடிவு எடுத்துள்ளதுதான் மறுப்புக்கு காரணமாம். ஏற்கனவே ஓம்காரா படத்திலும் அஜய்தேவ்கானுடனும், 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கானுடனம் நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரீனா கபூர் இந்தி நடிகர் சாயிப் அலிகானை திருமணம் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
About the Author
Posted by NIsha
on 10:27 PM. Filed under
tamil cinema news
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 10:27 PM. Filed under
tamil cinema news
.
Follow any responses to the RSS 2.0. Leave a response