Headlines
Published On:Friday, August 30, 2013
Posted by NIsha

தனது மகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட டியூஷன் ஆசிரியரின் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து தாய்

போபாலில் தனது மகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட டியூஷன் ஆசிரியரின் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து தாய் ஒருவர் அவமானப்படுத்தியிருக்கிறார். ஷுஜால்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனியார் டியூஷன் ஒன்றில் பயின்றுவந்தார். அப்போது அவருக்கு வகுப்பெடுக்கும் நரேந்திரா ஷர்மா என்னும் நபர் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார். மேலும் தான் இவ்வாறு நடந்துக்கொள்வதை பெற்றோரிடம் கூறினால் பல சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கும் என அந்த சிறுமியை மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொருமை இழந்த அச்சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆவேசமடைந்த சிறுமியின் தாயும், அவரது உறவினரும் பிரேம் நகரில் உள்ள டியூஷன் நிலையத்திற்கு வந்து நரேந்திரா ஷர்மா அடித்து உதைத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் தடுத்தபோதும், நரேந்திராவை தொடர்ந்து தாக்கிய அப்பெண்கள் அவரது முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து அவரை அவமானப்படுத்தினார்கள். இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் உடனடியாக போலீசில் தகவல் அளிக்க, அங்கு விரைந்த போலீசார் நரேந்திரா ஷர்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

Posted by NIsha on 4:19 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 4:19 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "தனது மகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட டியூஷன் ஆசிரியரின் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து தாய்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive