Headlines
Published On:Saturday, August 31, 2013
Posted by NIsha

கிரானில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தன்னை வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். மயிலந்தன்னை வயல் வெளியில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நேற்று மாலை இவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகினார். இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் இவர் உயிரிழந்ததாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

About the Author

Posted by NIsha on 9:46 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 9:46 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கிரானில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் மரணம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive