Headlines
Published On:Monday, August 26, 2013
Posted by NIsha

தற்காப்பு அங்கிகள் வழங்குமாறு மட்டக்களப்பு மீனவர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மற்றும் வாவியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தங்களுக்கு தாற்காப்பு அங்கிகளை வழங்குமாறு அந்த மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 24,000 குடும்பங்கள் கடல் மற்றும் வாவியில் மீன்பிடித்தொழில் மேற்கொள்வதை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. அடுத்த வருடத்திலிருந்து தற்காப்பு அங்கிகள் இன்றி மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாது என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், தங்களுக்கு இதுவரையில் தற்காப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்க்பாளர் டொமின்கோ ஜோர்ஜிடம் கேட்டபோது, சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் 100 தற்காப்பு அங்கிகள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பின்னர் தற்காப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை. தற்போது குறைந்தது 1,000 தற்காப்பு அங்கிகள் தேவைப்படுவதாக கூறினார்

About the Author

Posted by NIsha on 11:43 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 11:43 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "தற்காப்பு அங்கிகள் வழங்குமாறு மட்டக்களப்பு மீனவர்கள் கோரிக்கை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive