Published On:Thursday, August 29, 2013
Posted by NIsha
தமிழ் ரசிகர் மனிதில் இடம் பிடிக்கும் முயற்சியில் பியா
கோவா, பலே பாண்டியா உட்படசில படங்களில், நடித்த பியாவுக்கு, “கோ படத்துக்கு பின், கோலிவுட்டில் சரியான படங்கள் இல்லை. அதனால், பக்கத்து மாநிலங்களுக்கு வாய்ப்புத் தேடி படையெடுத்த போது, “தளம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம், தற்போது, தமிழ் பேச தயாராகி வருகிறது. நக்சலைட்டுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள, இப்படத்தில் ஒரு சஸ்பென்சான வேடத்தில் நடித்துள்ளாராம் பியா. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள பியா, “தமிழில், இதுவரை கிளாமரான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் ஆக்ஷன்அவதாரம் எடுத்துள்ளேன். இந்த படத்தில், என் நடிப்பும், ஆக்ஷனும், தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் என்கிறார். பியாவின் ஆசை நிறைவேறுமா என்பது, படம் வெளியானதும் தான், தெரிய வரும்.



