Headlines
Published On:Saturday, August 31, 2013
Posted by NIsha

250 கோடி ரூபா போதைப் பொருள் கடத்தியவர்களின் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை

போதைப் பொருள் கடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, கொழும்பு சுங்கப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்களை அம்பலப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார். மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 250 கோடி ரூபா எனத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்படைய செய்தி கொழும்பில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகரின் பெறுமதி 250 கோடியை தாண்டும்: சுங்க அதிகாரிகள் இலங்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இரு மலேசியர்கள்

About the Author

Posted by NIsha on 9:45 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 9:45 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "250 கோடி ரூபா போதைப் பொருள் கடத்தியவர்களின் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive