
ajith1-370x260 (1)துணிச்சல் என்றால் பேசாமல் அதற்கு அஜீத் பெயரை உடனே சொல்லி விடலாம். படம்தானே? பேசாமல் டூப் போட்டு நடிக்கலாம் என்றில்லாமல் நிஜமாகவே ரிஸ்க் எடுத்து நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே தான். அப்படித்தான் ‘வீரம்’ படத்தில் ஓடும் ரயிலில் தொங்கியபடியே காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார் அஜீத். ‘ஆரம்பம்’ படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிப்பில் தயாராகி வரும் படம்தான் ‘வீரம்’. ‘சிறுத்தை’ சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். ‘ஆரம்பம்’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதால் இப்போது ‘வீரம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜித். ஃபுல் ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளதாம். அஜீத் பெரும்பாலும் தான் நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சியில் ‘டூப்’ போடுவதில்லை. அதேபோல் இந்த படத்திலும் ஒரு காட்சியில் ‘டூப்’ இல்லாமல் நடித்துள்ளார். வீரம் படப்பிடிப்பு சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ஓடும் ரெயிலில் வெளியே தொங்கியபடி ஒரு காட்சியில் அஜீத் நடிக்க வேண்டியிருந்தது. டைரக்டர் சிவா டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அஜீத்தோ டுப்பெல்லாம் வேண்டாம், நானே நடிக்கிறேன் என்று தைரியமாக கூறி சொன்னபடி டூப் போடாமல் அந்தக் காட்சியில் நடித்து அசத்தினாராம். அஜீத்தின் இந்த துணிச்சலை பார்த்த வீரம் படக்குழுவினர் ஆச்சரியப்பட்டு அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
About the Author
Posted by NIsha
on 10:25 PM. Filed under
tamil cinema news
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 10:25 PM. Filed under
tamil cinema news
.
Follow any responses to the RSS 2.0. Leave a response