
அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்தவர் கிம் கார்டாஷியன் (32). டி.வி. நடிகை. இவர் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். ஒரு முறை நடந்த டி.வி. நிகழ்ச்சியில் இவர் தனது சமையல்காரர் ஷரோன் என்பவரிடம் குழந்தை பிறந்தவுடன் அதனுடன் சேர்ந்து வெளியாகும் நச்சு கொடியை (பிளாசன்டர்) எப்போதாவது சமைத்தது உண்டா? ஏனெனில் அதை சாப்பிடலாம் என்றார். அதற்கு பதில் அளித்த அவர், அதுபோன்ற ஸ்பெஷல் உணவை நான் இதுவரை சமைத்தது இல்லை. ஆனால் எனது மனைவி சமைத்து இருக்கிறார் என்றார். இதற்கிடையே, காதலன் பாடகர் கான்யே வெஸ்ட் என்பவருடன் குடும்பம் நடத்தி வரும் கிம் கார்டஷியானுக்கு கடந்த ஜூன் 15–ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கிம் கார்டிஷியான் குறித்து ஆன்லைனில் திடுக்கிடும் செய்தி வெளியானது. அதில், அவர் உடல் நலத்துக்காக தனக்கு குழந்தை பிறந்தவுடன் அதனுடன் வெளியான நச்சு கொடியை சமைத்து சாப்பிட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே, டி.வி. ரியாலிட்டி ஷோவில் தனது சமையல்காரரிடம் குழந்தை நச்சு கொடி சமையல் குறித்து அவர் கேட்ட விளக்கம் இச்செய்தி உண்மைதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
About the Author
Posted by NIsha
on 4:59 AM. Filed under
Tamil Vinthai news
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 4:59 AM. Filed under
Tamil Vinthai news
.
Follow any responses to the RSS 2.0. Leave a response