Headlines
Published On:Sunday, August 25, 2013
Posted by NIsha

நடிகர் அர்ஜூனின் முதல் மகள் ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து அவரது 2-வது மகளையும் தனது படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் விஷால்.

அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. வெளிநாட்டில் மேற்படிப்புகளை முடித்த கையோடு தாயகம் திரும்பிய ஐஸ்வர்யா, வந்த வேகத்தில் விஷாலுடன் ‘பட்டத்து யானை’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். ‘தலைவா’ தாமதத்தால் ‘பட்டத்து யானை’க்கு நல்ல ஓபனிங் கிடைத்து படமும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது. இதனால் சந்தோஷத்தில் இருக்கும் ஐஸ்வர்யா அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ‘பட்டத்து யானை’ படத்தில் ஐஸ்வர்யா அறிமுகப்படுத்திய நடிகர் விஷால் அவரது தங்கை அஞ்சனாவையும் தான் ஹீரோவாக நடிக்கப்போகும் புதிய படத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறாராம். நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்த ‘அஞ்சனா’ அக்காவுடன் ஷுட்டிங் ஸ்பாட்டுகளுக்கு சென்று வந்ததில் நடிப்பு ஆசை வந்து விட தன்னுடைய ஆசையை அப்பா அர்ஜூனிடம் கூறியிருக்கிறார். இந்த விஷயம் விஷால் காதுகளுக்கு வர, ஐஸ்வர்யாவைப் போல அஞ்சனாவையும் நான்தான் என்னுடைய படத்தில் அறிமுகப்படுத்துவேன் என அர்ஜுனிடம் கண்டிஷனாக சொல்லி விட்டாராம். அர்ஜூனும் விஷாலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். எனவே விரைவில் அஞ்சனா விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

About the Author

Posted by NIsha on 6:13 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:13 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "நடிகர் அர்ஜூனின் முதல் மகள் ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து அவரது 2-வது மகளையும் தனது படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் விஷால்."

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive