Published On:Saturday, August 31, 2013
Posted by NIsha
வவுனியா நோக்கிச் சென்ற ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை அம்பன்பொல - வெரஹெரயாம என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 24 வயதுடைய ரொஷான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டடைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த அம்பன்பொல பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.


