
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களிடம் இருந்து, அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய 12 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. சர்வதேச மட்டத்தில் உள்ள புலிகளின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் பேசுவதற்காக இந்த தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை பேச்சாளர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்ததுடன் அவருடன் இந்த தொலைபேசிகளை பயன்படுத்தி தொடர்பு கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். நவநீதம்பிள்ளை வெலிகடை மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள புலிகளின் சந்தேக நபர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதாக நம்பபடுகிறது. சில வேளைகளில் அவ்வாறு சந்திக்காமல் போனால் அவர்களை நவிப் பிள்ளையுடன் பேசவைக்கவே மேற்படி திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையே தாம் முறியடித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்
About the Author
Posted by NIsha
on 11:52 PM. Filed under
Srilanka Tamil News
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 11:52 PM. Filed under
Srilanka Tamil News
.
Follow any responses to the RSS 2.0. Leave a response