
அது இது எது’ என்று வருடக்கணக்கில் பேசிப் பேசியே கடைசியாக ‘இது’தான் நமக்கு சரிப்பட்டு வரும் என்று சினிமாவுக்குள் வந்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் முகம் காட்டி.. அப்படியே சினிமாவில் பிட்டு காமெடியனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்து மாதவியுடன் (கள்ளக்)காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. ஒரு நடிகையும், நடிகனும் காதலிப்பது சகஜம் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம். பிந்துமாதவி உடனான இந்த கள்ளக்காதல் சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பி விட இரவில் அவருக்கும், அவரது மனைவிக்கும் குடுமிபிடி சண்டைகள் நடப்பது தினசரி வாடிக்கைகளாம். சிவகார்த்திகேயன் தற்போது சென்னையில் வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் அப்பா மறைந்த பிறகு, அம்மாவுடன் தனிமரமான அவருக்கு அவரது மாமாதான் அந்த நேரத்தில் படிப்பு உள்ளிட்டவைகளுக்கு பொருளாதார உதவிகளைச் செய்தார். அந்த நன்றிக்கடனுக்காகவோ என்னவோ, உன் மாமா மகளைத்தான் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று அம்மா வற்புறுத்த, தன் அம்மாவின் விருப்பப்படி சொந்த மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன். பொதுவாக திருமணமான ஹீரோக்கள் தங்களின் திருமணத்தையே மறைத்து விடுவார்கள். சிவகார்த்திகேயனும் அதே போல தன் மனைவியை எந்தவொரு திரைப்பட விழாவுக்கும் அழைத்து வருவதில்லை. கேட்டால் அவங்களுக்கு இதெல்லாம் அலர்ஜி என்பார். இப்படிச் சொல்லிச் சொல்லியே அவரது மனைவியை வீட்டுக்குள் பூட்டி கிட்டத்தட்ட ஒரு ஹவுஸ் அரெஸ்ட் ரேஞ்சில் தான் வைத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இன்னொரு பக்கம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தபோது அந்தப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த பிந்து மாதவியுடன் செல்லம் கொஞ்சல் விளையாட்டு ஆடியிருக்கிறார். ஆந்திரா ஆவக்கா ஊறுகாயான பிந்துமாதவி ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் நழுவியிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட்டைப் பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளந்த அவர் சிவாவின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டாராம். அதன் பிறகு ரகசியமாக வளர்ந்த இவர்களது காதல் விரைவில் ரிலீஸாக இருக்கும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் (சிவா கேட்டுக் கொண்டதன் பேரில்) பிந்து மாதவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பிந்து உடனான காதலை படு ரகசியமாக வளர்த்த சிவகார்த்திகேயன் இந்த விஷயம் வெளியே தெரியாமல் கவனமாகத்தான் இருந்தார். அப்படியும்.. ஒரு கட்டத்தில் திருமதி.சிவகார்த்திகேயனுக்கு விஷயம் தெரிய வர.. தற்போது அவரது குடும்பத்தில் தினமும் குழப்பமு, குடுமிபிடிச் சண்டையும் தானாம்! ஆற்காடு சாலையில் செல்லும் வண்டிகளின் சத்தத்தைத் தாண்டி, சிவகார்த்திகேயனின் வீட்டிலிருந்து வரும் அழுகைச் சத்தத்தால் அக்கம் பக்கத்து வீட்டாருக்கு செம டென்ஷன். இதனால் வெறுத்துப் போன சிவகார்த்திகேயன் பேசாமல் மனைவியை விவாகரத்து செய்துவிடலாமா? என்று தனக்கு நெருக்கமான நட்பு வட்டங்களிடம் மீட்டிங் போட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறாராம். இந்த தகவலை நமக்குச் சொன்னதே தினமும் அவர்களது சண்டைக் காட்சிகளை பார்க்கு அதே அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் தான். சரி இது உண்மையா?பொய்யா? என்று விளக்கம் கேட்க அவர்களை தொடர்பு கொண்டால் வழக்கம் போல “ தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருக்கிறார்கள்”. அப்போ இதைப் படிச்ச பின்னாடியாவது ரெண்டு பேரும் உண்மையைச் சொல்லுங்க…
About the Author
Posted by NIsha
on 3:31 AM. Filed under
tamil cinema news
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 3:31 AM. Filed under
tamil cinema news
.
Follow any responses to the RSS 2.0. Leave a response