
தமிழில் டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சார்மி. அதன்பின் ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும் அந்த படங்கள் சரியாகப் போகாததால் தமிழில் அவருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு அவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியதால் தெலுங்கில் நிறைய படங்கள் வந்தன. அதனால் அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சார்மி பிரசித்தி கந்தா, ரம்பா ஊர்வசி மேனகா, மந்த்ரா 2 ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வரும் சார்மிக்கு அவர் நடித்துள்ள பிரேம ஒகமாலிகம் என்ற படம் நேற்று ஆந்திராவில் ரிலீசானது. இந்த நிலையில் டைரக்டர்கள் பலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். சில டைரக்டர்கள் மோசடித்தனமாக நடந்துள்ளனர் என்றும் அடுத்தடுத்து புகார் பத்திரம் வாசித்திருக்கிறார் சார்மி. இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : “‘மாயகடு’ என்ற தெலுங்கு படத்தில் நான் நடித்த போது அந்தப்படத்தின் டைரக்டர் எனக்கு தெரியாமலேயே என்னை ஆபாசமாக படம் பிடித்தார். படம் ரிலீஸானவுடன் அதை பார்த்த போது அதிர்ந்து போனேன். என்னுடைய அங்க அசைவுகளை வக்கிரமாக படமாக்கி இருந்தார்.” என்று அந்தப் பட டைரக்டரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் சார்மி
About the Author
Posted by NIsha
on 10:21 PM. Filed under
tamil cinema news
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 10:21 PM. Filed under
tamil cinema news
.
Follow any responses to the RSS 2.0. Leave a response