Headlines
Published On:Thursday, August 29, 2013
Posted by NIsha

ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஈ.ழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயணிகள் போக்குவரத்து விடயத்தில் குறிப்பாக வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை உடன் தவிர்க்கும் நோக்கில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். ஓமந்தை சோதனைச்சாவடியில் குறிப்பாக வடபகுதி தமிழ் பேசும் மக்கள் தமது போக்குவரத்தின் போது அசௌகரியங்களை சந்தித்து வருவதாக எடுத்து விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஓமந்தை சோதனை சாவடியை முற்றாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்து விளக்கிய நியாயங்களை ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு, ஓமந்தை சோதனை நடவடிக்கையை முதற்கட்டமாக உடன் தளர்த்துவதற்கு தான் உத்தரவிடுவதாகவும், அடுத்த கட்டமாக விரைவில் குறித்த சோதனை சாவடியை முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுப்பேன் என்றும் ஐனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார். ஓமந்தை சோதனை நடவடிக்கையை உடன் தளர்த்துவதற்கும், விரைவில் முற்றாக சோதனை சாவடியை அகற்றுவதற்கும் இணக்கம் தெரிவித்து தனது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஐனாதிபதி அவர்களுக்கும், சக அமைச்சர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் சார்பில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.

About the Author

Posted by NIsha on 9:14 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 9:14 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for " ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்."

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive