Headlines
Published On:Monday, August 26, 2013
Posted by NIsha

ஆர்யா படத்துக்கு எதிர்ப்பு! புறம்போக்கு தலைப்பை பயன்படுத்தக் கூடாது!

ஆர்யாவின் இரண்டாம் உலகம், ராஜா ராணி படங்கள் முடிந்துள்ளது. அடுத்து புறம்போக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்த படத்துக்கு புறம்போக்கு பெயர் வைப்பதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் ரிலீசான தனுசின் ராஞ்சனா படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். மிளகா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் கூறியதாவது:– புறம்போக்கு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் நான் பதிவு செய்து வைத்துள்ளேன். இதில் நானே கதாநாயகனாக நடிக்கவும் முடிவு செய்துள்ளேன். இதர நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இந்த தலைப்பை புதுப்பிக்க இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. இந்த நிலையில் புறம்போக்கு தலைப்பில் ஆர்யாவை வைத்து டைரக்டர் ஜனநாதன் படம் இயக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. புறம்போக்கு தலைப்பு எனக்கே சொந்தம். அதை விட்டுத் தரமாட்டேன். ஜனநாதன் வேறு தலைப்பை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த தலைப்புக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

About the Author

Posted by NIsha on 12:42 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 12:42 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ஆர்யா படத்துக்கு எதிர்ப்பு! புறம்போக்கு தலைப்பை பயன்படுத்தக் கூடாது!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive